செல்வகுமார் 
தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN


அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பிரிவு உதவியாளராக சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த மணி இருந்து வந்தாா்.

இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அவர் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பண மோசடி புகார்கள் வந்தன. 

கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வனிடம் போக்குவரத்துத் துறையில் உதவி பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாகப் புகாா் வந்தது.

இதன் புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் மணி, அவரது நண்பா் செல்வகுமாா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா். 

இதையடுத்து இருவரையும் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியை கடந்த மாதம் 28 ஆம் தேதி தீவட்டிப்பட்டி அருகே ஒரு வீட்டில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் செல்வகுமாா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா். 

இந்நிலையில், 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மணியின் நெருங்கிய நண்பர் செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாரை கொண்டலாம்பட்டியில் வைத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT