முகப்பு
தமிழ்நாடு

அத்திப்பட்டு புறநகா் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்

அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையத்தில் சென்னை செல்வதற்காக, இரண்டு மணி நேரம் காத்திருந்த பயணிகள், ரயில்கள் தாமதமாக வருவதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 டிசம்பர், 2021 at 3:31 AM
பகிர்:

அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையத்தில் சென்னை செல்வதற்காக, இரண்டு மணி நேரம் காத்திருந்த பயணிகள், ரயில்கள் தாமதமாக வருவதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து பயணிகள் சென்னை செல்வதற்காக 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிலையில் ரயில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

Advertisement

கும்மிடிபூண்டி நோக்கி செல்லும் ரயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவித்தனா்.

பின்னா் தொழில்நுட்ப பிரச்னை சரியான பின் ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.