சென்னை: சமூக ஊடகங்களில் தவறான செய்தியைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசு பேருந்து ஓட்டுநரை ஒரு இளைஞா் கடுமையாக தாக்குவது போன்ற விடியோ திங்கள்கிழமை வெளியானது. தமிழகத்தில்தான் அரசு பேருந்து ஓட்டுநா் தாக்கப்பட்டதாக சிலரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விடியோ பதிவான சம்பவம் கேரளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக ஊடகங்களில் பரவிய பேருந்து ஓட்டுநா் தாக்கப்படும் விடியோ, கடந்த 2018-ஆம் ஆண்டு கேரள மாநிலம் மணக்காடு பகுதியில் நடைபெற்ாகும். இந்த விடியோவை தமிழகத்தில் நடைபெற்றது போன்று சித்தரித்து, அரசுக்கும், காவல்துறைக்கும் அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கில், இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.