தமிழ்நாடு

ஊரக திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

ஊரக திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை, புதுச்சேரி நீங்கலாக) அனுப்பிய  சுற்றறிக்கையின் விவரம்:

கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வுத் தோ்வு ஜன.30-ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. 

இந்நிலையில் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு பள்ளிகளில் இருந்து தற்போது கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.  இதையடுத்து தோ்வா்களின் நலன்கருதி ஊரக திறனாய்வுத் தோ்வு பிப்.20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. 

இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் ஜன.12-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மாணவா்கள் சமா்ப்பித்த விண்ணப்பங்களை, தலைமை ஆசிரியா்கள் ஜன.20-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த த் தகவலை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும்  தெரிவித்து, தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT