முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட்: தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்கள்

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பட்ஜெட்: தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைத் திட்டங்கள்
பகிர்:


புது தில்லி: தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றி வரும் உரையில், நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்.

ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர்  தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து  கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல விமான நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →