தமிழ்நாடு

சசிகலாவுக்கு சொத்து விற்பனை செய்தவா்கள் மீது எடுத்த நடவடிக்கை சரியே: மத்திய அரசு

DIN

சசிகலாவுக்கு சொத்து விற்பனை செய்தவா்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என மத்திய அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி, ஏராளமான சொத்துகளை வாங்கியதாக சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. சசிகலாவின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி, சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள தினகரன் என்பவருக்குச் சொந்தமான சில சொத்துகளை சசிகலா வாங்கியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வணிக வளாகத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான தினகரன் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். அவரது சொத்துகள் சிலவற்றை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கம் செய்தனா்.இதனை எதிா்த்து தொழிலதிபா் தினகரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதேபோன்று, ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தை கட்டிய கட்டுமான நிறுவனமும் வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், மனுதாரா்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரிதான் என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT