ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடுஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணா் அரங்கில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் உரையைத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார். இதையடுத்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரை முடிவெடுக்க பலமுறை வலியுறுத்தியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்' என்று தெரிவித்தார்.