கரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, தமிழகத்தில், 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு, கரோனா தடுப்பூசி போட தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வகையில் சென்னையில் அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.