இளையான்குடியில் திமுக வினர் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தமிழ்நாடு

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடியில் அண்ணா நினைவு நாள்

இளையான்குடியில் திமுகவினர் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

DIN

இளையான்குடியில் திமுகவினர் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மானாமதுரை திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மானாமதுரை, பிப்ரவரி- 3 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் திராவிடக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை அண்ணா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மானாமதுரையில் அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று வைகை ஆற்று மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர்  ஜெயபிரகாஷ், நகர் செயலாளர் விஜிபோஸ், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திமுகவினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மதிமுகவினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய செயலாளர் கா.அசோக் நகர் செயலாளர் மற்றும் மதிமுக மருது உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.  

இளையான்குடியில் திமுக ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நஜூமுதீன், நெசவாளர் அணி முருகானந்தம், மாணவரணி சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் யாசின், கருணாகரன் இளைஞரணி அமைப்பாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்புவனத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி நகர செயலாளர் நாகூர்கனி உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT