முகப்பு
தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக் கொண்டபின் உயிரிழந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி முறையீடு

கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழந்த தூய்மை பணியாளரின்  உடலை, மருத்துவ நிபுணர் குழு மறு உடற்கூராய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
தடுப்பூசி போட்டுக் கொண்டபின் உயிரிழந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி முறையீடு
பகிர்:

கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழந்த தூய்மை பணியாளரின்  உடலை, மருத்துவ நிபுணர் குழு மறு உடற்கூராய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தூய்மை பணியாளரின்  உடலை, மருத்துவ நிபுணர் குழு (எய்ம்ஸ் அல்லது ஜிம்பர் மருத்துவர்கள்) அமைத்து மறு உடற்கூராய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என  நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக வழக்குரைஞர் அழகுமணி இந்த முறையீட்டை முன்வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர், புதூர் பேரூராட்சியில் முன்களப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.  கடந்த ஜனவரி 30  ஆம் தேதி வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,  மனோகரன் கரோனா தடுப்பூசி போட்டதன் காரணமாகவே இறந்துள்ளார் எனக் கூறியதோடு, அவரது உடலை வாங்க மறுத்து முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

எனவே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தூய்மைப் பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இறப்பிற்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடவேண்டும் என முறையிட்டார். 

அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.