முகப்பு
தமிழ்நாடு

பிப். 7-ல் தமிழகம் திரும்புகிறார் சசிகலா: டிடிவி தினகரன்

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
பகிர்:

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.31) விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் ஓய்வு பெற்று வரும் அவர், பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை  மீண்டும் அமைப்போம் என்று கூறினார்.

ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும்,

உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →