முகப்பு
தமிழ்நாடு

சேலம்: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 28-ம் ஆண்டு நிறைவு விழா

சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1990-1992 ஆம் ஆண்டு ஆசிரியர் மாணவர் சங்கமம் மற்றும் 28 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 3 பிப்ரவரி, 2021 at 3:48 PM
பகிர்:

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 1990-1992 ஆம் ஆண்டு ஆசிரியர் மாணவர் சங்கமம் மற்றும் 28 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தியாகராஜன் வரவேற்றார். தற்போதைய முதல்வர் சித்திரபுத்திரன் முன்னிலை வகித்தார்.  

முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார். ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதிவாணன் மற்றும் முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலீபுல்லா பொன்னுசாமி புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை போர்த்தப்பட்டது. தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர்  மாயகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அழகானந்தம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.