பாளை.யில் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா 
தமிழ்நாடு

பாளை.யில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல்படைக்கு 57 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 மாதமாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

இப்பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம். டாமோர் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இதில் காவல் துணை ஆணையர்(சட்டம்-ஒழுங்கு) சரவணன், உதவி ஆணையாளர் முத்தரசு, ஆய்வாளர் பேச்சிமுத்து, ஊர்காவல்படை வட்டார தளபதி சின்னராஜா, துணை வட்டார தளபதி கனகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT