முகப்பு
தமிழ்நாடு

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

திருநெல்வேலி சிந்துபூந்துரை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வராஜ்(39). இவர் கடந்த புதன்கிழமை கொக்கிரகுளம் தைப்பூச மண்டபம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அவர் உடமைகள் அனைத்தும் ஆற்றங்கரையில் இருந்த நிலையில் செல்வராஜை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆற்றில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை தாமிரவருணி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.