முகப்பு
தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வருடன் செல்லத் தயார்: ஸ்டாலின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பி.க்களுடன் உடன் செல்லத் தயார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பி.க்களுடன் உடன் செல்லத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் முடிவை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் வஞ்சக எண்ணமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தேர்தலுக்கு தேர்தல் நாடகம் போடுவதையும், வேடம் கட்டுவதையும் கைவிடுங்கள்.

சிறையிலடைத்த 8 ஆண்டில் மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகம் போடுவதாகக் கூறுவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.