முகப்பு
தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானைக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
நெல்லையப்பர் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானைக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் யானைகளுக்கான புத்துணர்வுமுகாம் இம்மாதம் 8-ஆம் தேதி முதல் 48 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து,  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச கோயில்களுக்குச் சொந்தமான யானைகள் அதில் பங்கேற்கவுள்ளது. 

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த பொதுவான அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் தெரிவித்திருந்தார். 

அதன்படி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி(49) யானைக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை நடைபெற்றது.

திருநெல்வேலியில் உள்ள தனியார் ஆய்வு மையம் இச்சோதனையை நடத்தியது. இதில், யானையின், மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றில் இருந்து சளி மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.

இதற்கான பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை காலைக்குள் கிடைக்கும். மேலும், இந்த காந்திமதி யானை சனிக்கிழமை இரவு திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து லாரி மூலம்   தேக்கம்பட்டி புறப்பட்டுச் செல்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக  என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.