சத்தியமங்கலம்: திருநீலகண்டர் நாயனார் குருபூஜை
சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டர் நாயனார் குருபூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டர் நாயனார் குருபூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் கொங்கு குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் திருநீலகண்டர் நாயனார் கோவிலில் குருபூஜை நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகணடர் சுவாமி, ரத்தினசாலா விக்ரத்துக்கு கலச அபிஷேகம், சங்கு அபிஷேகம் தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
Advertisement
சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, திருநீலகண்டர் கோயிலில் நடந்த அன்னதானம் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.