கீழையூர் கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் 
தமிழ்நாடு

நாகை: கீழையூரில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கீழையூர் கடைத்தெருவில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெற கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதலை கண்டித்தும் டெல்லி போராட்ட த்திற்கு ஆதரவாக  கீழையூர் கடைத்தெருவில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் நாட்டில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்க மாநில தலைவர் வீ. சுப்பிரமணியன்  தலைமை வைத்தார்.

இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளர் சித்தாா்தன் , மாவட்ட குழு உறுப்பினர் வெங்கட்ராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கீழையூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர். 

இதேபோல சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் விவசாய சங்க மாவட்ட தலைவர் எம்.என்‌ அம்பிகாபதி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை வலிவலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT