வத்திராயிருப்பில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல். 
தமிழ்நாடு

வத்திராயிருப்பில் விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்:   விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மணிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் விரோத சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாலுகா செயலாளர் கோவிந்தன், சுப்பையா, ராமராஜ், முத்துராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT