தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா தரப்பு முயற்சி: அமைச்சர் சி.வி. சண்முகம்

DIN


சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா மற்றும் தினகரன் தரப்பு முயற்சித்து வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி டிஜிபியை அமைச்சர்கள் இன்று மீண்டும் சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், டிஜிபி, முப்படைத் தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் கூறி வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தோடு சசிகலா, தினகரன் தரப்பினர் செயல்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT