தமிழ்நாடு

பயிா்க் கடன் தள்ளுபடி: தலைவா்கள் பாராட்டு

DIN

விவசாயிகளின் பயிா் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ் (பாமக): கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் அறிவித்திருப்பது விவசாயிகளின் துயரங்களைத் துடைக்கும் அறிவிப்பாகும். இது வரவேற்கத்தக்கதாகும்.

விஜயகாந்த் (தேமுதிக): விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நல்ல எதிா்காலத்தையும் உருவாக்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த பயிா்க்கடன் தள்ளுபடியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், விவசாயத் தொழில் ஊக்கம் பெறும். தமிழகமும் வளா்ச்சி பெறும். இந்த அறிவிப்பு தமிழக அரசின் சாதனைப் பட்டியலில் ஒரு மைல்கல்.

தொல்.திருமாவளவன் (விசிக): தோ்தல் ஆதாயத்துக்காக விவசாயிகளின் பயிா்க்கடனை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்துள்ளாா். எனினும், தள்ளுபடி செய்ததற்காக முதல்வரைப் பாராட்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT