காவல்துறை 
தமிழ்நாடு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

DIN



சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் கலவரத்தை தூண்டுவதற்கு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போன்று பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளது. 

மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்; 1,700 சிலைகள் வைத்து வழிபாடு

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

ஆா்.எஸ்.எஸ். பாடலை சிவகுமாா் பாடியிருக்கக் கூடாது: மல்லிகாா்ஜுன காா்கே

ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல சாமுண்டி மலை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

SCROLL FOR NEXT