தமிழ்நாடு

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சனிக்கிழமை இரவு கடலில் படகு கவிழந்ததில் ஞாயிற்றுக்கிழமை காலை இருவரது சடலங்கள் கரை ஒதுங்கியன. இருவர் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரை வெள்ளாற்று முகத்துவாரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில் சிங்காரகுப்பத்தைச் சேர்ந்த முருகன் மகன் அப்பு (40), எம்ஜிஆர் திட்டைச் சேர்ந்த அப்பாசு மகன் குணசேகரன் (60), எம்ஜிஆர் திட்டு கிருஷ்ணசாமி மகன் வீர தமிழன் (50), எம்ஜிஆர் திட்டு செல்லப்பன் மகன் தமிழன் (52), ஆகிய 4 நபர்களும் மீன்பிடிக்கச் சென்று கரைக்கு திரும்பும்போது சனிக்கிழமை இரவு கிள்ளை வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்தது. இதில், 4 பேர்களும் கடலில் விழுந்தனர். இதில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவரும் கரை சேர்ந்தனர்.

படகு கவிழ்ந்ததில் நீர் மூழ்கி காணாமல் போன வீர தமிழன், தமிழன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் தேடி வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியது. இதனையடுத்து கிள்ளை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT