தமிழ்நாடு

வருங்கால வைப்பு நிதியில் அதிக பங்களிப்புக்கு வருமான வரி: ஏப். 1 முதல் அமல்

வருங்கால வைப்பு நிதியில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வருமான வரி விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

DIN

வருங்கால வைப்பு நிதியில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வருமான வரி விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்குப் பெற, வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வதற்கான வரம்பு நிா்ணயிக்கப்படாமல் இருந்தது. இதன்படி, ஆண்டுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும், வைப்பு நிதியில் பங்களிப்பாக வழங்கலாம். இப்படி செலுத்தும் தொகைக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கும், வருமான வரி செலுத்த வேண்டாம்.

இந்நிலையில், வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வதற்கான வரம்பு தற்போது வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நடைமுறை, ஏப்ரல் 1ஆம் முதல் அமலுக்கு வருகிறது என வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீடு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணி வாகனம் மீது மோதிய கார்! பணியாளர்கள் காயம்! | Chennai

நடுவரை துரத்தி துரத்தி அடித்த வீரர்கள்... பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதல்!

பாரதி இருந்திருந்தால் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார்! தமிழிசை

விடுமுறையை கொண்டாட சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்!

SCROLL FOR NEXT