சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த கார்களில் தீ விபத்து 
தமிழ்நாடு

சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த கார்களில் தீ விபத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்த போது 2 கார்களில் தீ விபத்து நேரிட்டது.

DIN

கிருஷ்ணகிரி: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்த போது 2 கார்களில் தீ விபத்து நேரிட்டது.

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவின் வரவேற்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 

ஒருபுறம் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கிருஷ்ணகிரி  தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அங்கிருந்த தொண்டர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கார்களுக்கு அருகில் இருந்த கார்களை அப்புறப்படுத்தினர். இதனால் அருகிலுள்ள மற்ற கார்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சசிகலாவை வரவேற்க வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடிக்க அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பட்டாசுகள் ஏற்றப்பட்டிருந்த காரில், சாலையில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்து நேரிட்டதால், அருகருகே இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT