தமிழ்நாடு

சசிகலாவின் கார் தடுத்து நிறுத்தம்; காவல்துறை நோட்டீஸ்

DIN

கிருஷ்ணகிரி எல்லையில் சசிகலா வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டதற்கு நோட்டீஸ் அளித்தனர். 

பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையான சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜனவரி 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

மருத்துவா்களின் அறிவுரைப்படி, பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் இன்று(பிப்.7) சென்னை வருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணித்தார். இதையடுத்து கிருஷ்ணகிரி எல்லையில் அவரது காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

பின்னர், சசிகலா செல்லும் காரில் அதிமுக கொடி இருப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் அளித்தார். ஆனால், காரில் இருந்த கொடி அகற்றப்படவில்லை. 

முன்னதாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையானது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக தரப்பில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT