முகப்பு
தமிழ்நாடு

​முத்தூரில் ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
தீயை அணைக்கும் தீயணைப்பு படையினர்.
பகிர்:


திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

முத்தூர் - காங்கயம் சாலையில் எஸ்.ஆர்.செந்தில்குமார் (45) என்பவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. மில் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு இயந்திரத்தில் மின்சாரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவெனப் பரவியது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இயந்திரம், மேற்கூரை, 9 டன் பஞ்சு ஆகியவை எரிந்து நாசமானது.

முழு கட்டுரையைப் படிக்க →