தொரவலூரில் சிறுமருத்துவமனை: எம்எல்ஏ திறந்து வைத்தார்
அவிநாசி அருகே தொரவலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார்.
தமிழ்நாடுதொரவலூரில் சிறுமருத்துவமனை: எம்எல்ஏ திறந்து வைத்தார்
அவிநாசி அருகே தொரவலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார்.
அவிநாசி: அவிநாசி அருகே தொரவலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார்.
திருப்பூர் ஒன்றியம், தொரவலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் தேவகி சம்பத்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஜெகதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாமிநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் அவிநாசியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.