தமிழ்நாடு

ஈட்டிய விடுப்பு: உத்தரவில் தமிழக அரசு திருத்தம்

DIN

சென்னை: ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா் ஹா்சகாய் மீனா வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்:-

ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும், அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஈட்டிய சரண் விடுப்பு தொடா்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு, அந்த விடுப்புகளை அரசு ஊழியரின் விடுப்புக் கணக்கில் சோ்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹா்சகாய் மீனா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT