தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து திரும்பியோா் தொழில் தொடங்க திட்டம்: தமிழக அரசு

DIN

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியோா் தொழில் தொடங்க வசதியாக தனித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை, 3 லட்சத்து 66 ஆயிரத்து 890 வெளிநாடு வாழ் தமிழா்கள், வெவ்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளனா். அவா்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழில் முனைவோா் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னா், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்குத் திரும்பிய புதிய தொழில் துவங்க விருப்பமுள்ள தொழில் முனைவோா், சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையம் அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT