விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரேமலதா
விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கொடிநாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் பொதுச்செயலாளர் விஜயகந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கொடியினை ஏற்றினார்.
பின்னர் பிரசார வாகனத்தில் இருந்தவாறே விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கு கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வரும்.
அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்.
கூட்டணி குறித்து இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள். தொகைக்காட்சி விவாதங்களில் தேமுதிகவினர் இனி பங்கேற்பார்கள்.
விஜயகாந்த் உத்தரவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரேமலதா கூறினார்.