தமிழ்நாடு

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை; செங்கோட்டையன்

DIN


ஈரோடு: அரசுப் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் திறன் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பேசுகையில், மத்திய அரசு நடத்தும் நீட் மற்றம் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நமது அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. எனவேதான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி பெற சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 5800 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT