முகப்பு
தமிழ்நாடு

பிப். 28-ல் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2021 at 8:31 PM
பகிர்:

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பேரவையில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

4(D)2 அரசாணை குளறுபடிகளால் பறிக்கப்பட்ட 600 மருத்துவ இடங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மினி கிளினிக்குகளில் காலமுறை ஊதியத்தில் எம்.ஆர்.பி. தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

மேலும், பிப்ரவரி 17-ம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவோம் என்றும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.