தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

DIN


சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர்கள் சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைக்காரர் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர். 

இந்நிலையில், சனிக்கிழமை சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களில் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணும், கணவன் மனைவியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

யாரென்று தெரிகிறதா?

விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT