முகப்பு
தமிழ்நாடு

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று: ஓ.பன்னீர்செல்வம்

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
பகிர்:

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக  கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. தாய்த்திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அரங்கில் பெரும் அவமானத்தையும்,அரசுக்கு  மாபெரும் இழப்பையும் தேடித்தந்த 2G இமாலய அலைக்கற்றை ஊழல், வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல்,கூவம் நதி ஊழல் என எண்ணிலடங்கா

ஊழல்களை விஞ்ஞான ரீதியில் புரிந்த திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் திமுகவின் ஊழல்களை மக்கள் மறந்திருப்பர் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஊழலால் புரையோடிப்போன திமுகவின் கரைபடிந்த ஆட்சியை அகற்றத் தான்

தமிழக மக்கள் எங்களோடு கைகோர்த்து உங்களை வீட்டிற்கு அனுப்பினர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீயசக்திகளால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →