தமிழகத்தில் புதிதாக 451 பேருக்கு கரோனா
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 451 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 451 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,46,026 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 149 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் 470 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,29,388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,432 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,206 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.