வெள்ளக்கோவிலில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
முத்தூர் சாலையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் தலைமை வகித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்.
வெள்ளக்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.கந்தசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகரச் செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மொத்தம் 129 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு துண்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன. அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் உள்ளிட்டோர்.