குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தித் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று (பிப்.17) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி, இன்று (பிப். 17) ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இராசகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தை, மத்திய - மாநில அரசுகளின் பொதுத்துறை ஓய்வூதியர்களின் பேரமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தில் 550 ஓய்வூதியர்களுக்கு ரூ.250 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
Advertisement
கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத இந்த பணி நிறைவு பணப் பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் 350 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.