முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:


தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை கவனமாக கண்காணிப்பதற்காக இரு  இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரப் பணிகளில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →