காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்: தமிழிசையிடம் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுவையில் பலமிழந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும், உடனடியாக அவர்கள் பதவி விலகச் செய்ய வேண்டும் என, துணைநிலை ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் வலியுறுத்தினர்
புதுவையில் பலமிழந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும், உடனடியாக அவர்கள் பதவி விலகச் செய்ய வேண்டும் என, துணைநிலை ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் வலியுறுத்தினர்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வியாழக்கிழமை பொறுப்பேற்றதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி தலைமையில், பாஜக தலைவர் வி.சாமிநாதன், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் ஆகியோர் மாலை 3 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்து வந்தனர்.
அதுதொடர்பாக என். ரங்கசாமி உள்ளிட்ட மூவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதால், ஆட்சியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும், பெரும்பான்மை இழுந்துள்ளதால் ஆட்சியில் இருந்து அவர்கள் தாமாக பதவி விலகச்செய்ய வேண்டும் என்று, ஏற்கனவே நாங்கள் கடிதம் அளித்ததை மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களை ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்றனர்.