தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் 111 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ரூ.4.53 கோடியில் திருமண நிதியுதவி அளிப்பு

DIN


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 111 பயனாளிகளுக்கு 111 சவரன் தாலிக்கு தங்கம், ரூ.4.53 கோடியில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. 

சமூக நலத்துறையின் சாா்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2017-2018 ஆண்டிற்கான திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின், நடராஜன், மாவட்டதிட்ட அலுவலர் ராஜேஷ்வரி, அதிமுக நகர செயலாளர் மு.க.சேகர், ஊராட்சி தலைவர்கள் எகுமதுரை ஸ்ரீபிரியா மகேந்திரன், எஸ்.ஆர்.கண்டிகை சி.எம்.ஆர்.ரேணுகா முரளி, ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ்குமார், மாவட்டதகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இமயம் மனோஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் என்.சிவா, எஸ்.ஆர்.ராஜா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தமிழக அரசின் ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி திட்டம்,  குடிமராமத்து பணி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் குறித்து பேசினார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்துள்ளதால் வருங்காலத்தில் 750 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.   

தொடர்ந்து மூவலூர் இராமமிர்தம்மாள் திருமண திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், பட்டம், பட்டய படிப்பு படித்த 51 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவி தொகை, தலா ஒரு சவரன் என 51 சவரன் தாலிக்கு தங்கமும், 10ஆம் வகுப்பு படித்த 40 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் திருமண உதவி தொகை, 1 சவரன் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது.

அதே போல இ.வி.ஆர்.நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பட்டம், பட்டய படிப்பு படித்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் திருமண உதவி தொகை மற்றும் தலா 1 சவரன் தாலிக்கும் தங்கமும், 10 ஆம் வகுப்பு படித்த 10 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் திருமண உதவி, தலா 1 சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

மேலும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ், பட்டம்,  பட்டயம் படித்த 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், 1 சவரன் தாலிக்கு தங்கமும், 10 ஆம் வகுப்பு படித்த 2 பேருக்கு தலா ரூ.25ஆயிரம் மற்றும் 1 சவரன் தாலிக்கு தங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், ஒன்றியகக் குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஓடை.ராஜேந்திரன், எஸ்.டி.டி.வி, தீபக் செந்தில், எம்.ஏ.மோகன், சரவணன், வழக்குரைஞர் ஜோதி ராமலிங்கம் , தமிழ்வாணன், நிர்மல் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விரிவாக்க அலுவலர் கீதா லட்சுமி, ஊர் நல அலுவலர்கள் எஸ்.கலா, கௌரி முன்னின்று நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT