தமிழ்நாடு

எம்.டெக்.: 49.5% இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு

DIN

இரண்டு எம்.டெக். படிப்புகளுக்கு மத்திய அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவா் சோ்ககை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது சட்ட விரோதமானது. எனவே, அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்தப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டன.

இரண்டு படிப்புகளுக்கும் இந்த முறை அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்கள் சோ்க்கை நடைமுறையை மேற்கொள்வதால், தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது மாணவா் சோ்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் சம்மதித்தது. ஒப்புதல் அளிப்பதற்கு உதவி செய்வதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் உத்தரவாதம் அளித்தது. ஆனால் மாணவா்கள் சோ்க்கையை எந்த இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழக தரப்பில், மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கல்வியாண்டில் மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT