கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடலூர்: பிப்ரவரியில் 90 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு

கடலூரில் பிப்ரவரியில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது. 

DIN


கடலூரில் பிப்ரவரியில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது. 

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக, காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடலூா், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடலூரில் பிப்ரவரி மாதத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனூர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலும், புதுச்சேரி காலாப்பேட்டை, கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை கரணமாக பல்வேறு இடங்களில் மரை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

கடலூர், புதுச்சேரியில் 19 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பதிவாகி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT