தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை

DIN

புதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். 

புதுவையில் ஆளும் காங்கிரஸில் இருந்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என 4 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை (பிப். 22) சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வா் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். இதில், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பு கருதி, புதுவையில் உள்ள ஆளும் காங்கிரஸ்-திமுக உறுப்பினா்கள், என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன உறுப்பினா்களுக்கு சனிக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT