சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடுசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசி அடுத்த சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இங்குள்ள மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த 3 அறைகளில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.