சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பசுமை தீர்ப்பாயம் குழுவினர். 
தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பசுமை தீர்ப்பாயம் குழு ஆய்வு

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தை பசுமை தீர்ப்பாயம் குழு ஆய்வு மேற்கொண்டது.

DIN


சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தை பசுமை தீர்ப்பாயம் குழு ஆய்வு மேற்கொண்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து வெடி விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விபத்து குறித்து விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர்.

இதனடிப்படையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த குழுவின் விசாரணை மற்றும் ஆய்வுகள் முடிந்த பிறகு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT