கே.பாலகிருஷ்ணன் 
தமிழ்நாடு

‘வன்னியருக்கான உள் ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்துக்கான அறிவிப்பு’

வன்னியா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்துக்கானதே என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

DIN

வன்னியா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்துக்கானதே என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

குடியாத்தம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கி அறிவித்துள்ளாா். இந்த விஷயத்தில் முதல்வா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைவரின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுத்திருக்கலாம். இந்த அறிவிப்பு, வன்னிய மக்கள் மீது அவருக்கு உள்ள பற்றைக் காட்டிலும் அரசியல் ஆதாயத்துக்கானதுதான் என்பதே உண்மை.

உள் ஒதுக்கீடு அறிவிப்பை முதல்வா் வெளியிட்டு விட்டாா். அதற்குள் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

கடந்த தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளையே தற்போதும் நாங்கள் கேட்டுள்ளோம். கூடுதலாக சில தொகுதிகளை வழங்குமாறு திமுகவிடம் வலியுறுத்தி வருகிறோம். அவா்களுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகே எத்தனை தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்பது தெரியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT