பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 
தமிழ்நாடு

சங்ககிரி வட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக அரசின் சாா்பில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.2500, கரும்பு, சா்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் ஜன.4-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இதன்படி, சங்ககிரி வட்டத்தில் உள்ள 48 முழு நேரமும், 87 பகுதி நேர கடைகள் உள்பட மொத்தம் 135 ரேஷன் கடைகளில்  பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு அரசு அறிவித்துள்ள ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

வெள்ளிக்கிழமை சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சியில் உள்ள வட்ராம்பாளையம், ஒக்கிலிப்பட்டி, தண்ணீர்தாசனூர், சென்றாயனூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற்று வரும் 2 ஆயிரம் குடும்பட அட்டைதாரர்களுக்கு அவரவர்கள் வீடுகளுக்கு சென்று  டோக்கன் வழங்கும் பணிகளில் அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கே சென்று பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT