திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி. 
தமிழ்நாடு

திருச்சியில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 9.68 கோடியில் சைக்கிள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர். 

DIN



திருச்சி: திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர். 

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி, திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். 

திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடங்கும். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 587 மாணவர் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 9 கோடியே 68 லட்சம் ஆகும். 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT