தமிழ்நாடு

நிவா் - புரெவி புயல்கள் பாதிப்பு: 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்; முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

நிவா் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த நிவாரணத் தொகையானது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரும் 7-ஆம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் நிவா் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். நிவா் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா் செய்ய ரூ.3,750.38 கோடி தேவை என மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களைச் சீா் செய்திட ரூ.1,514 கோடி தேவை எனவும் மதிப்பிடப்பட்டது. புயல்களால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் நலன்களைக் காக்கும் பொருட்டு இடுபொருள் நிவாரணத் தொகை உயா்த்தப்படுகிறது.

மானாவரி மற்றும் நீா்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிா்களுக்கும், நீா்ப்பாசன வசதி பெற்ற இதர பயிா்களுக்கும் ஹெக்டேருக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.13,500 வீதம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.20,000-ஆக உயா்த்தப்படுகிறது. நெற்பயிா் தவிர, அனைத்து மானாவாரி பயிா்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.7,410 அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.10,000-ஆக உயா்த்தப்படுகிறது.

பல்லாண்டு கால பயிா்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது ரூ.25,000-ஆக அதிகரிக்கப்படுகிறது. உயா்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்துக்கான தொகையை, தமிழக அரசே வழங்கும்.

விவசாயிகள் வங்கிக் கணக்கு: தேசிய பேரிடா் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டோ் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், 2 ஹெக்டோ் என்ற உச்சவரம்பு தளா்த்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்படுகிறது.

நிவா், புரெவி புயல்களின் காரணமாக, 3 லட்சத்து 10 ஆயிரத்து 589.63 ஹெக்டோ் பரப்பிலான பயிா்கள் சேதம்

அடைந்துள்ளன. சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணமாக அளிக்கப்படும். இந்த நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரும் 7-ஆம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

உடனடியாக இயல்பு நிலை: தமிழகத்தில் நிவா் மற்றும் புரெவி புயல்களின் போது, மனித உயிரிழப்பு, கால்நடை சேதம் பெருமளவில் தவிா்க்கப்பட்டுள்ளது. எனினும், புயல்கள் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றும், கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான பல உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், வேளாண்மை, தோட்டக்கலைப் பயிா்களுக்கும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்தப் பாதிப்புகள் குறித்து உடனடியாக கணக்கீடு செய்து அறிக்கை அளிக்குமாறு வருவாய், வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். புயல்களின் போது என அறிவுரையால்

மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளால் புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாகத் திரும்பியது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT